
வாஷிங்டன்: இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.
இந்தநிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (ஏப். 3) அறிவித்துள்ளாா். அதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் அரசு முன்னெடுத்து வரும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மற்றும் பிற வர்த்தக கொள்கைகளைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், இந்திய பொருள்களுக்கு சலுகையுடன் கூடிய வரிவிதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், பிற நாட்டு பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள வரிகள்:
சீனா - 34%
ஐரோப்பிய ஒன்றியம் - 20%
பிரிட்டன் - 10%
வியட்நாம் - 46%
தைவான் - 32%
ஜப்பான் - 24%
மலேசியா- 24%
தென் கொரியா- 25%
தாய்லாந்து - 36%
சுவிட்ஸர்லாந்து - 31%
இந்தோனேசியா - 32%
கம்போடியா- 49%
இலங்கை - 44%
பாகிஸ்தான் - 29%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.