ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521% வரி விதிப்பு! இந்தியாவுக்கு பாதிப்பா?

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521% வரி விதிப்பு!

News image
Updated On :22 ஏப்ரல் 2025, 9:22 am IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521% வரி விதிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக திங்கள்கிழமை(ஏப். 21) அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சோலார் உபகரணங்கள் பல, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, வெளிநாட்டு சூரிய சக்தி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மீது முறைகேடு புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் வர்த்தக துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்கண்ட வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.