விண்வெளி செல்லும் இந்திய வீரர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

மே 29-ல் விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவைப் பற்றி...
விண்வெளி செல்லும் குழுவினருடன் சுபான்ஷு சுக்லா (இடமிருந்து 3-வது..)
விண்வெளி செல்லும் குழுவினருடன் சுபான்ஷு சுக்லா (இடமிருந்து 3-வது..)
Published on
Updated on
1 min read

இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா மே 29ஆம் தேதி விண்வெளிக்கு செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றையும் படைக்க உள்ளார்.

வருகிற மே 29 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.33 மணிக்கு ஆக்ஸியம் மிஷன் 4-ன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அவர்கள் விண்வெளிக்குச் செல்விருக்கின்றனர். இவருக்கு முன்னதாக 1984 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தில் இந்திய வீரர் ராகேஷ் சர்மாவின் சென்றிருந்தார்.

2,000 மணி நேரத்திற்கும் மேல் பறக்கும் திறன் பெற்றவரான சுபான்ஷு சுக்லா, 2019 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷியாவிலும் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கியிருக்க போகும் சுபான்ஷு சுக்லா, சைனோபாக்டீரியாக்கள் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதையும் படிக்க: அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

ஐ.ஏ.எஃப் கேப்டனான சுபான்ஷு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் பிறந்து புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் கல்வி கற்றவர். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விமானப் படையில் சேர்ந்து, 2024 ஆம் ஆண்டு மார்ச்சில் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

2,000 மணி நேரத்திற்கும் மேலான விமானத்தை இயக்கிய அனுபவத்தைக் கொண்டுள்ளவர் சுபான்ஷு சுக்லா. ஐஏஎஃப்பில் சோதனை விமானியாக இருக்கும் இவர், ஷூ-30 எம்.கே.ஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஆன்-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களையும் இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இஸ்ரோவால் விண்வெளி வீரர் பயிற்சிக்காக சுபான்ஷு சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுபான்ஷு சுக்லாவுடன் செல்லும் குழுவினர் யார்?

இவருடன் நாசாவின் மூத்த விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையிலான சர்வதேச குழுவுடன், போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெக்கி விட்சன்

முன்னாள் நாசா விண்வெளி வீரரும், ஆக்ஸியம் ஸ்பேஸில் விண்வெளிப் பயணத்தின் தற்போதைய இயக்குநருமான இவர், மிஷன் கமாண்டராகப் பணியாற்றவுள்ளார்.

ஸ்லோவோஸ்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பணிபுரியும் போலந்து விண்வெளி வீரரான இவர் ஒரு பணி நிபுணராக பணியாற்றவுள்ளார்.  

திபோர் கபு

ஹங்கேரிய விண்வெளி வீரரும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கான திட்ட விண்வெளி வீரருமான அவர், மற்றொரு பணி நிபுணராக பணியாற்றவிருக்கிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com