பெரு படகு விபத்து: 44-ஆக அதிகரித்த உயிரிழப்பு

பெரு படகு விபத்து: 44-ஆக அதிகரித்த உயிரிழப்பு

பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது.
Published on

பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே விபத்துப் பகுதியில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 30 பேரும் உயிா் பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து உகயாலி மாகாண ஆளுநா் மானுவல் காம்பினி கூறுகையில், விபத்துப் பகுதியில் இரு வாரங்களாக நடத்தப்பட்ட தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. கடும் மழை காரணமாக அந்தப் பணிகளைத் தொடர முடியவில்லை. மழைக்காலம் முடியும் மே மாதத்துக்குப் பிறகு உடல்களைத் தேடும் பணி மீண்டும் தொடங்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com