தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகார்னஸ்பர்க்கிலிருந்து மேற்கே 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெக்கர்ஸ்டால் நகரின் மதுபான விடுதியில் அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மினி பேருந்து மற்றும் காரில் வந்த அடையாளம் தெரியாத 12 சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும்போதும் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று வாரங்களில் நடக்கும் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
Summary
Nine people have died, and at least 10 others were wounded after a group of gunmen carried out a shooting at a South African pub during the early hours of Sunday, authorities said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு



