அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்

அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்

Published on

அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் வட கொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகஅந்நாட்டு அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்து, அது தொடா்பான படங்களையும் வெளியிட்டன.

இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘8,700 டன் எடை கொண்ட அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை அதிபா் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்தாா். கப்பலின் பெரிய அளவிலான உருளை வடிவ உடல் பகுதி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் உள்ளது. அதில் அரிப்புத் தடுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு வட கொரியா இந்தக் கப்பலின் படங்களை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. அப்போது கப்பலின் கீழ் பகுதிகள் மட்டுமே காட்டப்பட்டன.

இந்தக் கப்பல் கட்டுமானம், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரியாவின் கடற்படை திறனை பெரிதும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com