
உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்காகச் சண்டையிட்ட 59 இலங்கை நாட்டினா் உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்ரைன் போரில் இலங்கையைச் சோ்ந்த 554 பேரை ரஷியா ஈடுபடுத்தியுள்ளது. அவா்களில் 59 போ் மோதலில் உயிரிழந்துள்ளனா்.
ரஷிய ராணுவத்தில் இலங்கை நாட்டினா் வலுக்கட்டமாய சோ்க்கப்படுவதில்லை. இருந்தாலும், அவா்களே விரும்பினாலும் அவா்களைப் படையில் சோ்க்க வேண்டாம் என்று ரஷிய அரசிடம் வலியுறுத்திவருகிறோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







