விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போப் பிரான்சிஸ் சீராக சுவாசிக்கிறார்; வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை: வாடிகன்

போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் அறிவிப்பு.

News image

போப் பிரான்சிஸ் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனையில் போப் ஜான் பால் சிலை

AP

Updated On :18 பிப்ரவரி 2025, 2:18 pm

DIN

போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.

சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் (88), கடந்த 4 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரோம் நகரிலுள்ள கெமிளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டதாக வாடிகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வென்டிலேட்டரில் அவர் இல்லை என்றும், தற்போது சீராக சுவாசித்துவருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர் கலந்துகொள்ளவிருந்த பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

வார இறுதியில் நடைபெறவிருந்த புனித ஆண்டு நிகழ்ச்சிகள் பிப். 23ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.