காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு!

AP

Published On :7 ஜனவரி 2025, 9:20 am IST

வாஷிங்டன், டி.சி : அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் திங்கள்கிழமை(ஜன. 6) அந்நாட்டு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை(ஜன. 6) கூடிய நாடாளுமன்ற அவையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாகவும், அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஜன. 20-ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.