புதின் பேச்சுக்கு வராவிட்டால் கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப்

உக்ரைன் போர் நிறுத்த பேச்சுக்கு புதின் வராவிட்டால்... டிரம்ப் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் PTI
Published on
Updated on
1 min read

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை பேசிய டிரம்ப், ரஷிய அதிபர் புதினை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து டிரம்ப் பேசியதாவது:

“போர் ஒருபோதும் தொடங்கி இருக்கக் கூடாது. திறமையான அதிபர் இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது.

நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா போருக்கு சென்றிருக்காது. புதினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது. மக்களை அவமதித்த பைடனை புதின் அவமதித்தார்.

பைடனை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது ஒரு கொடூரமான சூழல். பெரும்பாலானோர் ராணுவ வீரர்களாக மாறிவிட்டார்கள். நகரங்கள் இடிந்த இடங்களாக காணப்படுகிறது.

உக்ரைனில் அறிவிக்கப்பட்டதைவிட அதிகளவிலான மக்கள் பலியாகியுள்ளனர். உண்மையான எண்ணிக்கையை வெளியிடாததற்கு உங்களை குறை சொல்லவில்லை, வெளியிட விரும்பாத அரசை குறை கூறுகிறேன்.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் அளிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் என்னிடம் கூறினார். இரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com