ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

டிரம்ப் எச்சரிக்கை... அடிபணிந்த கொலம்பியா!

கொலம்பியா அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image

டொனால்ட் டிரம்ப் / குஸ்டாவோ ஃபெட்ரோ

Updated On :27 ஜனவரி 2025, 9:36 am

DIN

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கொலம்பிய அரசு ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான வரி மற்றும் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

அமெரிக்கா - கொலம்பியா சச்சரவு

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியிருந்த கொலம்பியர்களை கொலம்பியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை ஏற்றிவந்த இரு விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை.

குடியேறிய மக்களை பொது விமானங்கள் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும் என்றும் ராணுவ விமானங்களில் அனுப்ப அவர்கள் குற்றவாளிகளில்லை என்றும் அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாகக் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகள், கொலம்பிய இறக்குமதிகள் மீதான 25% வரிகள் (அவற்றை 50% ஆக உயர்த்தும் திட்டம்), கொலம்பிய பொருட்களுக்கான சுங்க ஆய்வுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளை அறிவித்தார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று கூறிய டிரம்ப், "இந்த நடவடிக்கைகள் வெறும் ஆரம்பம்" என்றும் தெரிவித்தார்.

கொலம்பியா சொல்வது என்ன?

அமெரிக்கா புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளைப் போல நடத்துவதை விமர்சித்த கொலம்பிய அதிபர், "புலம்பெயர்ந்தவர் குற்றவாளி அல்ல. ஒரு மனிதனுக்குத் தகுதியான கண்ணியத்துடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கு 25% ஏற்றுமதி வரி உயர்வையும் அறிவித்தார்.

பின்னர், நாடு கடத்தப்படும் மக்கள் திரும்புவதற்காக கொலம்பியா அனுப்பிய விமானங்களை பயன்படுத்துவதை அமெரிக்கா நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக் கொண்டதால் கொலம்பியா மீதான 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிரம்ப்பும் பெட்ரோவும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் அதிபர் டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்கா கருதுகிறது.

தற்போது கொலம்பியா அதிபர் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி அந்த மக்களை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தாக அமெரிக்கா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.