
ஈரான் நாட்டில் 20 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பன்னாட்டு விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனும் பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கியது.
அதன்பின்னர், இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியதுடன், பயணிகள் விமானம் உள்பட அனைத்து வகையான விமானங்களின் சேவைகளுக்கும் தடை விதித்தன.
12 நாள்கள் நடைபெற்ற அந்தப் போரானது நிறுத்தப்படுவதாக, கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனை, இருநாடுகளும் ஏற்றுக்கொண்டதன் மூலம் தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் இயல்புநிலைக்கு திரும்பும் முயற்சியாக சுமார் 20 நாள்கள் கழித்து தற்போது பன்னாட்டு நகரங்களுக்கு பயணிகளின் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பன்னாட்டு விமான நிலையத்தில், துபாய் நாட்டிலிருந்து சென்ற முதல் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், வரும் நாள்களில் குறிப்பிட்ட சில பன்னாட்டு நகரங்களுக்கான விமானங்கள் இயக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: உலகின் முதல் நாடாக தலிபான் அரசை அங்கீகரிக்கும் ரஷியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.