
தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சரணாலயங்களில் ஒன்றின் இணை உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஃப்சி கான்ராடி யானை மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசல் விரிகுடாவிற்கு அருகிலுள்ள 27 ஏக்கர் வனவிலங்கு புகலிடமான கோண்ட்வானா தனியார் விளையாட்டு சரணாலயத்தில் ஜூலை 22 அன்று இந்த சம்பவம் நடைபெற்றது.
39 வயதான கான்ராடி வனவிலங்கு ஆர்வலர். சுற்றுலா விடுதிகளிலிருந்து யானைகள் கூட்டத்தை வழிநடத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஆறு டன் எடையுள்ள யானை ஒன்று கான்ராடியை தனது தந்தங்களால் குத்தி, பலமாகத் தாக்கி மிதித்துக் கொன்றது
சம்பவம் நடைபெற்றதற்கு அருகில் வனக்காப்பாளர்கள் கான்ராடியை காப்பாற்றி முதலுதவி செய்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கான்ராடி யானைகள் மீது அதீத அன்பு கொண்டவர். யானைகளை புகைப்படம் எடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்த அவர், விலங்கியல், விலங்கு ஆய்வுகள், வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் கௌரவப் பட்டம் பெற்றவர்.
அவருக்கு மனைவி லா-இடா(33) இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்குள் சரணாலயத்தில் ஏற்பட்ட இரண்டாது யானை தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்தாண்டு மார்ச்சில் வனக்காவலர் டேவிட் கண்டேலா(36) யானைகள் கூட்டத்தை வழிநடத்தும்போது யானை ஒன்று தாக்கி கொல்லப்பட்டார்.
எஃப்.சி. கான்ராடியின் இந்த மரணம் தென்னாப்பிரிக்காவின் பாதுகாப்பு சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது மற்றும் வனவிலங்கு காப்பகங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.