வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!
ENS

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக வங்கி தகவல்
Published on

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் கொண்டு, வறுமைக் கோடு அளவிடப்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் 44.7 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கூறுகிறது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் நாளொன்றுக்கு ரூ. 688 சம்பளம் வாங்குவோர்தான் உயர்ந்த மற்றும் நடுத்தர வர்க்கமாகக் கொள்ளப்படுகின்றனர்.

ஆனால், அந்நாட்டில் 44 சதவிகித மக்கள் (சுமார் 10 கோடி பேர்) நாளொன்றுக்கு ரூ. 350 முதல் ரூ. 361 வரையில் சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர்.

இந்த நிலைக்கும் தாழ்வாக, நாளொன்றுக்கு ரூ. 258 சம்பளம் வாங்குவோரும் உள்ளதாகவும், இவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com