ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார். ஆனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் உள்பட அனைத்து பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் அதன் வான்வழிப் பாதைகள் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், தற்போது போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈரானும் போர்நிறுத்தத்தை ஏற்பதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து இயக்கப்படும் அவசரகால சிறப்பு விமானங்களுக்காக மட்டும் அந்நாட்டின் வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்படுவதாக, இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரினால், இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின. இருப்பினும், அந்நாடுகளில் சிக்கியுள்ள வெளிநாட்டவரை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பலை தாக்கிய ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

போர் இன்னும் முடியவில்லை! - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! ஈரான் அறிவிப்பு!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்குமா?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



