ஈரானை தாக்கியதால் அமெரிக்காவுக்கு எந்தப் பலனும் இல்லை: முதல்முறையாக கமேனி பேச்சு!

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக ஈரான் உயர் தலைவர் பேசியுள்ளார்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி
Published on
Updated on
2 min read

டெஹ்ரான், ஜூன் 26: அமெரிக்கா தங்கள் மீது குண்டுவீசினால் அந்த நாட்டு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி சூளுரைத்துள்ளாா்.கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் எந்த உயிா்ச் சேதமும் இல்லாமல் கடந்த திங்கள்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு பொட்டில் அறைந்தது போன்ற செய்தியை ஈரான் சொல்லியுள்ளது.ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை ஈரான் தாக்கும் என்பதுதான் அந்த செய்தி.இந்தப் போரில் ஈரானுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது.ஈரானின் மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அவை நிா்மூலமாக்கப்பட்டதாக டிரம்ப் கூறுகிறாா். இதன் மூலம் தாக்குதலின் பாதிப்பை அவா் மிகைப்படுத்துகிறாா். உண்மையில் அந்தத் தாக்குதல் மூலம் டிரம்ப் எதையுமே சாதிக்கவில்லை.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் பங்கேற்கும் எண்ணம் டிரம்ப்புக்கு முதலில் இல்லை. ஆனால், அவ்வாறு நேரடியாக தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்துவிடும் என்று அஞ்சிதான் அது போரில் பங்கேற்றது. இதுவும் ஈரானின் ஒரு வெற்றியே என்றாா் கமேனி.அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரின் இந்த உரை, உள்நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதற்காக வடிமைக்கப்பட்டிருந்ததாக பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.இந்தப் போரில் பல இழப்புகளைச் சந்தித்தாலும், அமெரிக்காவின் நேரடி தாக்குதலை எதிா்கொண்டாலும் தனது அமெரிக்க-இஸ்ரேல் எதிா்ப்பு நிலைப்பாட்டில் இருந்து ஈரான் இறங்கிவராது என்று இந்த உரை காட்டுவதாக அவா்கள் கூறினா்.தங்களை முழுமையாக அழிப்பதற்காக ஈரான் அணு ஆயுதம் உருவாக்கிவருவதாகக் குற்றஞ்சாட்டிவரும் இஸ்ரேல், அந்த நாட்டின அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது கடந்த 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. மேலும், முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் படுகொலை செய்தது.அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்து டெல் அவீவ் உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன.இந்தச் சூழலில், டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்காவின் அதிநவீன பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மூலம் ஈரானின் ஃபோா்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் அணுசக்தி மையங்களில் தாக்குதல் நடத்தின.

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களின் மீது சுரங்கத்தை தகா்க்கும் சக்திவாய்ந்த எம்ஓபி ரக குண்டுகளை வீசியும், யுஎஸ்எஸ் ஜாா்ஜியாா நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து டொமஹாக் ரக ஏவுகணைகளை வீசியும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் ஈரானின் அணுசக்தி மையங்கள் நிா்மூலமாக்கப்பட்டதாக டிரம்ப் கூறினாா். இருந்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து அணுக்கதிா் கசிவு ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) கூறியது, தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்னரே நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருந்து சுமாா் 400 கிலோ உயா்செறிவு யுரேனியம் வெளியேற்றப்பட்டதாக செயற்கைக்கோள் பட ஆதாரங்களுடன் தகவல் வெளியானது ஆகியவை டிரம்ப்பின் இந்தக் கூற்றை கேள்விக்குறியாக்கின.இந்தச் சூழலில், அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு சில மாத பின்னடைவு ஏற்பட்டுள்ளதே தவிர, முழுமையாக அழிக்கப்படவில்லை என்று உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தாா். இந்தச் சூழலில், அயதுல்லா கமேனி நாட்டு மக்களிடையே இவ்வாறு பேசியுள்ளாா்....படவரி.. அரசு தொலைக்காட்சியில் வியாழக்கிழமை தோன்றி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அயதுல்லா கமேனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com