ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
Published on

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.

இது தொடா்பாக வங்கதேச அரசும் ஊழல் தடுப்பு அமைப்பும் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜியா அறக்கட்டளை வழக்கில் கலீதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் கடந்த நவம்பரில் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனா்.

மாணவா் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை விடுதலை செய்ததது. கலீதா மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டுவருகின்றன.

X
Dinamani
www.dinamani.com