ஹாரி பாட்டர் புகழ் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார்!

ஹாரி பாட்டர் புகழ் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார்!
சைமன் ஃபிஷெர் பெக்கர்..
சைமன் ஃபிஷெர் பெக்கர்..
Published on
Updated on
1 min read

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார். அவருக்கு வயது 63.

ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் மற்றும் டாக்டர் ஹூ ஆகிய படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று தனக்கென தனி இடத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர். இவர் உடல்நலக்குறைவால் காலமான செய்தியை அவரது மேலாளர் ஜாஃப்ரி மேனேஜ்மென்ட்டின் கிம் பாரி உறுதிப்படுத்தினார்.

இதையும் படிக்க: மீண்டும் மறுவெளியீடாகும் இன்டர்ஸ்டெல்லர்!

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி பார்க்கும் ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் படத்தில் ஹஃபிள்பஃப் வீட்டில் பேயான ஃபேட் ஃப்ரியராக ஃபிஷர்-பெக்கர் ரசிகர்களில் இதயங்களை வென்றிருந்தார்.

டாக்டர் ஹூ சீசன் 5 மற்றும் 6 இல் டோரியம் மால்டோவராக அவரது குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவ்விரு படங்களைத் தவிர்த்து அவர் பப்பி லவ், ஒன் ஃபுட் இன் தி கிரேவ், தி பில், லவ் சூப் மற்றும் ஆஃப்டர் லைஃப் போன்ற பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அவரது ஆஸ்கர் விருது பெற்ற லெஸ் மிசரபிள்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியரா இவர்? உலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஹனுமன்கைண்ட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com