
விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பணிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிருந்து அவர்கள் அப்பணிகளை செய்வார்கள் என நாசா குறிப்பிட்டுள்ளது.
நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
''நாசாவின் கிரியூ -10 குழுவைச் சேர்ந்த ஆனி மெக்லேன், நிக்கோல் அயர்ஸ், ஜப்பானைச் சேர்ந்த வீரரான டகுயா ஒனிஷா, ரஷியாவைச் சேர்ந்த கிரில் பெஸ்கோவ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விண்வெளி மையத்தில் உள்ள 3 வீரர்களுடன் இணைந்து இவர்கள் செயல்படுவார்கள் என்றும் சர்வதேச விண்வெளி மையத்தின் சீரான செயல்பாடுகளை இனி இக்குழு உறுதி செய்யும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
பூமிக்கு புறப்பட்ட் சுனிதா வில்லியம்ஸ்
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் உள்ளிட்டோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.
சுனிதா வில்லியம்ஸ் உடன் புட்ச் வில்மோா், நிக் ஹாவுக், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சான்டர் கோர்புனோவ் ஆகிய 4 பேருடன் விண்வெளியில் இருந்து டிராகன் விண்கலன் புறப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமையான இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்ட விண்கலம், பூமிக்கு இன்னும் 15 மணிநேரத்தில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டிய கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |ஹூதிக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன்?
இதையும் படிக்க | விண்ணில் இருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.