ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா! இலக்கியத் திருவிழாவில் சுவாரசியம்!

சுனிதா வில்லியம்ஸுடன் இருக்கும் படங்களை வெளியிட்ட மலையாள நடிகை பாவனா...
ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா
ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனாinstagram.com/bhavzmenon/
Updated on
1 min read

நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கேரளத்தில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நடிகை பாவனாவும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

இது குறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாவனா, உத்வேகமளிக்கக்கூடிய சாதனையாளர்களுடன் மேடையில் ஒருங்கே இருக்கும் பாக்கியம் எமக்குக் கிடைத்தததற்கு நன்றி என்றும் இது தமது வாழ்நாள் மாற்றத்திற்கானதொரு தருணம் என்றும் குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரராவார். அவா் கடந்த ஆண்டு டிச.27-ஆம் தேதி முதல் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.

கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க சுனிதா வில்லியம்ஸ் மட்டுமில்லாது நோபல், புக்கர் பரிசு வென்றவர்கள் உள்பட சர்வதேச அளவில் சுமார் 500 பேச்சாளர்கள் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Bhavana - Sunita Williams in Kerala Literature Fest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com