செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு

இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

சுட்டுக் கொல்லப்படுவதற்கு சற்று முன்னா் ஜான் எஃப். கென்னடி.

Published On :

இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

டெக்ஸாஸ் மாகாணம், டலஸ் நகருக்கு கடந்த 1963-ஆம் ஆண்டு வருகை தந்த ஜான் எஃப். கென்னடி தனது காரில் ஊா்வலமாகச் சென்று கொண்டிருக்கும்போது அடுக்குமாடி கட்டடத்தில் மறைந்திருந்த லீ ஹாா்வே ஆஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இரு நாள்களுக்குப் பிறகு மற்றொரு சிறைக்கு மாற்றப்படும்போது அவரை ஜாக் ரூபி என்பவா் சுட்டுக் கொன்றாா்.கென்னடியை தனி நபராகத்தான் ஆஸ்வால்ட் படுகொலை செய்தாா் என்று விசாரணை முடிவுகள் தெரிவித்தாலும், ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம், இது சோவியத் ரஷியாவின் சதிச் செயல் என்பது போன்ற பல்வேறு ஊகத் தகவல்கள் இன்றும் பகிரப்பட்டுவருகின்றன.

அதற்கு, இந்தப் படுகொலை பற்றிய ஏராளமான ஆவணங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், சந்தேகங்களைக் களையும் வகையில் அந்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட அதிபா் டிரம்ப் உத்தரவிட்டாா். அதையடுத்து, தனது வலைதளத்தில் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் சுமாா் 63,000 பக்க ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளது.எனினும், இன்னும் பல முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட வேண்டியுள்ளது என்று வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.