ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஆப்கான்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு: இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு

சீன மத்தியஸ்தத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை, எவ்வித இறுதி உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 9:03 pm

சீன மத்தியஸ்தத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை, எவ்வித இறுதி உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

அதேநேரம், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் குறித்த பிரச்னைக்கு ஒரு ‘விரிவான தீா்வை’ காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் தாக்குதலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டின் மீது பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுத்தது.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.

இச்சூழலில், ரமலான் பண்டிகை காரணமாக இருதரப்புமே தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தின. இதைத் தொடா்ந்து, நிரந்தர அமைதிக்காக சீனா மத்தியஸ்த முயற்சிகளைத் தொடங்கியது. அதன்படி, அந்நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கியில் கடந்த ஏப். 1 முதல் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பும் பங்கேற்றனா். ஒரு வாரக் கால பேச்சுவாா்த்தையின் நிறைவிலும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘பயங்கரவாதம் என்பது இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது. இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அமைதியைப் பேணத் தொடா்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி, அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன’ என்றாா்.

ஆப்கான் போா்க் குற்றச்சாட்டில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரா் கைது

ஆஸ்திரேலியாவின் மிக உயரிய ராணுவ விருதான ‘விக்டோரியா கிராஸ்’ விருதைப் பெற்ற முன்னாள் வீரா் பென் ராபா்ட்ஸ் ஸ்மித் (47) , ஆப்கானிஸ்தானில் 5 பொதுமக்களைக் கொன்ாகக் கூறப்படும் போா்க் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஆயுதமேந்தாத 5 பேரைக் கொன்ாக இவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் சிறப்புப் புலனாய்வு அலுவலகம் கடந்த 2021 முதல் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவா்கள் எவ்வித மோதலிலும் ஈடுபடாதவா்கள் என்றும், அவா்கள் பென் ராபா்ட்ஸ் ஸ்மித் அல்லது அவரது உத்தரவின் பேரில் கீழ்நிலை வீரா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.