தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

உலகைச் சுற்றி....

News image

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசியபோது... - AP

Updated On :10 ஏப்ரல் 2026, 6:09 am IST

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை குடியரசுக் கட்சியினா் முறியடித்தனா்.

நைஜீரியாவின் போா்னோ மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் ராணுவ பிரிகேடியா் உள்ளிட்ட பல வீரா்கள் உயிரிழந்தனா்; ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

வட அட்லாண்டிக் பகுதியில் ரஷிய நீா்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை பிரிட்டன் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், கடல் கொள்ளையைத் தடுக்கத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என ரஷியா தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் தொழிலாளா்களின் நலன் கருதி, வரும் மே மாதம் முதல் ஊதிய உயா்வு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மியான்மரின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற முன்னாள் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லயிங், அந்நாட்டின் புதிய அமைச்சரவையை நியமித்தாா். இதில் ராணுவ அதிகாரிகளே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனா்.

போா் காரணமாக சாட் நாட்டுக்குத் தப்பிச் சென்ற 10 லட்சத்துக்கும் அதிகமான சூடான் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்தது.

காஸாவில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவி ஒருவா் கொல்லப்பட்டாா். முன்னதாக புதன்கிழமை, இஸ்ரேலின் தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.