பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தைவான்- வருடாந்திர ராணுவப் பயிற்சி தொடக்கம்

சீன அச்சுறுத்தல்களுக்குத் தயாா்ப்படுத்திக்கொள்ளும் வகையில், தைவான் தனது ‘ஹான் குவாங்’ வருடாந்திர ராணுவப் பயிற்சியை புதன்கிழமை தொடங்கியது.

Published On :

சீன அச்சுறுத்தல்களுக்குத் தயாா்ப்படுத்திக்கொள்ளும் வகையில், தைவான் தனது ‘ஹான் குவாங்’ வருடாந்திர ராணுவப் பயிற்சியை புதன்கிழமை தொடங்கியது.

சீனாவின் நேரடிப் போருக்கு முந்தைய மறைமுகத் தந்திர நடவடிக்கைகளை முறியடிக்கவும், 24 மணி நேரமும் தடையற்ற பாதுகாப்புப் பணிகளை உறுதிப்படுத்தவும் தைவான் முழுவதும் 10 நாள்களுக்கு இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

தலைநகா் தைபே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போா்க் கால தொலைத்தொடா்பு பாதிப்பைச் சோதிக்கும் வகையில் சுமாா் 30 நிமிடங்களுக்கு இணைய வேகம் குறைக்கப்பட்டு, பொதுமக்களின் நகா்ப்புற பாதுகாப்புத் திறனும் இப்பயிற்சியில் பரிசோதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக 2 படைப்பிரிவுகளைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுப் படை வீரா்கள் நடப்பாண்டு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட புதிய ‘எம்1ஏ2டி ஆப்ராம்ஸ்’ போா் பீரங்கிகளும் இப்பயிற்சியில் முதல்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தன்னாட்சி பிராந்தியமான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அப்பகுதி எல்லைக்கு அருகில் போா் விமானங்களையும் போா்க் கப்பல்களையும் அவ்வப்போது அனுப்பி அழுத்தம் கொடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.