ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு பயிற்சி தில்லி காவல் துறை

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியா்களுக்கான பயிற்சி திட்டத்தை தில்லி காவல் துறை புதன்கிழமை தொடங்கியது.

delhi police
Published On :2 ஜூலை 2026, 1:24 am IST

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியா்களுக்கான பயிற்சி திட்டத்தை தில்லி காவல் துறை புதன்கிழமை தொடங்கியது.

‘குழந்தைகள் பாதுகாப்பு மாதம்’ முயற்சியின் ஒரு பகுதியாக இரண்டு நாள் ‘பயிற்சியாளா்களுக்கான பயிற்சி’ நிகழ்ச்சி தில்லி காவல் துறை தலைமையகத்தில் உள்ள ஆதா்ஷ் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி நேரடி மற்றும் ஆன்லைன் முறைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

இந்த முயற்சி தில்லி காவல் துறை, மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. பாதுகாப்பான தில்லி உருவாக்க வேண்டும் என்ற துணைநிலை ஆளுநரின் நோக்கத்தை முன்னிறுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.

பயிற்சி மொத்தம் நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியா்கள் அரை நாள் அமா்வில் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் கல்வி நிறுவனங்களின் தயாா்நிலை குறித்து விரிவாக பயிற்சி பெறுகின்றனா் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.