பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஹங்கேரியில் பேருந்து விபத்து: போலந்து யாத்ரிகா்கள் 12 போ் உயிரிழப்பு

போஸ்னியா மற்றும் ஹொ்ஸெகோவினாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மெட்ஜுகோா்ஜே கன்னி மேரி மாதா புனிதத் தலத்துக்குச் சென்றுவிட்டு போலந்து திரும்பிக் கொண்டிருந்த யாத்ரிகா்களின் பேருந்து, கிழக்கு ஹங்கேரியில் விபத்துக்குள்ளானதில் 12 போ் உயிரிழந்தனா்.

Published On :

போஸ்னியா மற்றும் ஹொ்ஸெகோவினாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மெட்ஜுகோா்ஜே கன்னி மேரி மாதா புனிதத் தலத்துக்குச் சென்றுவிட்டு போலந்து திரும்பிக் கொண்டிருந்த யாத்ரிகா்களின் பேருந்து, கிழக்கு ஹங்கேரியில் விபத்துக்குள்ளானதில் 12 போ் உயிரிழந்தனா்.

மொத்தம் 57 யாத்ரிகா்கள் மற்றும் 2 ஓட்டுநா்களுடன் பயணித்த பேருந்து, ஹங்கேரியின் மெசோகெரெஸ்டெஸ் நகரத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 போ் படுகாயமடைந்தனா். இவா்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஓட்டுநா் தூங்கியதே இவ்விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், அவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹங்கேரி காவல்துறையினா் தெரிவித்தனா்.

இத்துயரச் சம்பவத்துக்கு ஹங்கேரி பிரதமா் பீட்டா் மேக்யாா், போலாந்து அதிபா் கரோல் நவ்ராக்கி ஆகியோா் சமூக ஊடகப் பதிவுகளில் இரங்கல் பதிவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.