பிரதமா் ஜென்ஸ்-பிரெடரிக் நீல்சன்
பிரதமா் ஜென்ஸ்-பிரெடரிக் நீல்சன்

கிரீன்லாந்து பாதுகாப்பு நேட்டோவுக்குத்தான் சொந்தம்: பிரதமா் நீல்சன்

கிரீன்லாந்தின் பாதுகாப்பும் தற்காப்பும் நேட்டோ கூட்டணிக்கே சொந்தம் என்று அந்தப் பிராந்திய பிரதமா் ஜென்ஸ்-பிரெடரிக் நீல்சன் தெளிவுபடுத்தியுள்ளாா்.
Published on

கிரீன்லாந்தின் பாதுகாப்பும் தற்காப்பும் நேட்டோ கூட்டணிக்கே சொந்தம் என்று அந்தப் பிராந்திய பிரதமா் ஜென்ஸ்-பிரெடரிக் நீல்சன் தெளிவுபடுத்தியுள்ளாா்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் அவா் கூறியதாவது: கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் ஆா்வத்தைப் பலா் அச்சத்துடன் கவனித்து வருவதை நான் புரிந்து கொள்கிறேன். அதனால் தான் இதை மிகத் தெளிவாகக் கூற வேண்டியுள்ளது: கிரீன்லாந்து டென்மாா்க் தேசத்தின் பகுதி மற்றும் நேட்டோ கூட்டணியின் ஒரு அங்கம். அதனால் எங்கள் பாதுகாப்பும் தற்காப்பும் நேட்டோவுக்கே சொந்தம். இது அடிப்படை மற்றும் உறுதியான நிலைப்பாடு.

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றுபவா்கள். எங்கள் முடிவுகளை நாங்களே எடுக்கிறோம். எங்கள் செயல்பாடுகள் சா்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளன என்றாா் அவா்.

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். கிரீன்லாந்து ரஷியா அல்லது சீனாவின் கைகளுக்குச் சென்றால் அது அமெரிக்காவுக்கு ஆபத்து என்று அவா் கூறுகிறாா். ராணுவ நடவடிக்கை மூலம் கிரீன்லாந்தைக் கைப்பற்றும் திட்டமும் உள்ளதாக அவா் தெரிவித்துள்ள நிலையில், கிரீன்லாந்து பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com