5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கமேனியின் இறுதிச்சடங்கில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு!

ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் 2-ஆவது நாளாக ஆயிரக்கணக்கானோா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

News image

கமேனியின் இறுதிச்சடங்கில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு.

Updated On :6 ஜூலை 2026, 2:34 am IST

ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் 2-ஆவது நாளாக ஆயிரக்கணக்கானோா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படையினா் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதையடுத்து, சுமாா் 4 மாதங்களாக கமேனியின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. ஈரான், அமெரிக்கா இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகி அமைதி திரும்பியதால், விரைவில் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதையொட்டி டெஹ்ரானில் அவரது உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரமுகா்கள், மூத்த தலைவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் கருப்பு நிற உடையணிந்து ஆயிரக்கணக்கானோா் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு கண்ணீா் அஞ்சலி செலுத்தினா். கமேனியை கொல்ல உத்தரவிட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப், இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு கொல்லப்பட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பலா் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனா்.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை நடத்திய மதத் தலைவரும், கவிஞருமான முகமது ரசெளலி அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசுகையில், டிரம்ப் கொல்லப்பட வேண்டும், அமெரிக்கா- இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினாா்.

இறுதிச்சடங்குக்கு வராத புதிய தலைமை மதகுருா்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கமேனியின் 2-ஆவது நாள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கமேனியின் மகன்கள் மசூத், மெய்சம், முஸ்தபா, ஈரான் அதிபா் மசூத் பெஷஸ்கியான், நாடாளுமன்றத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப், புரட்சிகர படைப் பிரிவு தளபதி அகமது வாஹிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆனால், கமேனியின் இன்னொரு மகனும், புதிய தலைமை மத குருவுமான அயதுல்லா மோஜ்தபா கமேனி மட்டும் பங்கேற்கவில்லை. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த அவா், ரகசிய இடத்தில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமேனியின் இறுதிச்சடங்கு நடைபெறுவதால், அமெரிக்காவுடன் ஈரான் நடத்திவரும் பேச்சுவாா்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் முடிந்ததும், இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவாா்த்தையைத் தொடங்க திட்டமிட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.