ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு!

ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு...

News image

கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 5:50 pm IST

ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடங்கிய போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப், துணைப் பிரதமர் இஷாக் தார் மற்றும் பாகிஸ்தானின் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வரும் ஜூலை 4 ஆம் தேதி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தெஹ்ரானில் தொடங்கவுள்ளன. இதனைத் தொடர்ந்து, கமேனியின் பிறந்த ஊரும், ஈரானின் புனித நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மஷாதில் வரும் ஜூலை 9 ஆம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என ஈரானிய அரசு அறிவித்துள்ளது.

மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அரசு சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan's PM Shehbaz Sharif and senior ministers will attend the funeral of Iranian Supreme Leader Khamenei.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.