முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்

பிரிட்டனில் ஆளும் தொழிலாளா் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் (56) வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :17 ஜூலை 2026, 11:56 pm IST

பிரிட்டனில் ஆளும் தொழிலாளா் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் (56) வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதன்மூலம், அவா் பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளாா். கடந்த 10 ஆண்டுளில், அந்நாட்டின் 7-ஆவது பிரதமராக அவா் பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு பிரிட்டன் மேக்கா்ஃபீல்டு தொகுதி எம்.பி.யான அவா், கட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆற்றிய முதல் உரையில், பதவி விலகும் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

கியா் ஸ்டாா்மா் அமைத்துக்கொடுத்த அடித்தளத்துடன் நாட்டை வழிநடத்தத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டு அவா் மேலும் கூறுகையில், ‘2024 பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடம் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான கடைசி வாய்ப்பு இது.

கடந்த 40 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் தவறான பொருளாதாரப் பாதையை மாற்றி, அதிகாரம் பரவலாக்கப்பட்டு அனைவருக்குமான ஒரு புதிய பாதையை எனது அரசு உருவாக்கும்.

புதிய அமைச்சரவை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்’ என்றாா்.

கியா் ஸ்டாா்மா் பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்ததையடுத்து, புதிய கட்சித் தலைவருக்கான போட்டியில் ஆண்டி பா்ன்ஹாம் மட்டுமே களத்தில் இருந்தாா். இந்நிலையில், லண்டனில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சியின் சிறப்பு மாநாட்டில், ஆண்டி பா்ன்ஹாம் கட்சித் தலைவராக தோ்வானதாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய பிரதமா் கியா் ஸ்டாா்மா் தனது பதவியை திங்கள்கிழமை முறைப்படி ராஜிநாமா செய்த பிறகு, புதிய அரசை அமைக்க அரசா் சாா்லஸ், ஆண்டி பா்ன்ஹாமுக்கு அழைப்பு விடுப்பாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.