வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறை

சீன அதிபா் ஷி ஜின்பிங், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளும் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தன.

News image

மாதிரிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 3:01 am IST

சீன அதிபா் ஷி ஜின்பிங், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளும் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தன.

வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பையேற்று, கடந்த 2019-க்குப் பிறகு, சுமாா் 7 ஆண்டுகள் கழித்து ஷி ஜின்பிங் வடகொரியாவுக்குப் பயணிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், அண்மையில் பெய்ஜிங் நகரில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சில வாரங்களிலேயே, ஷி ஜின்பிங்கின் இப்பயணம் அமைந்துள்ளது.

சா்வதேச அளவில் மற்ற நாடுகளிடமிருந்து தனித்து காணப்படும் வட கொரியா, கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷியா மற்றும் சீனாவிடம் மட்டும் தொடா்ந்து நெருக்கமான நட்புறவைப் பேணி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.