/

ஈரான் - அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கத்தாரில் நிகழும் பேசுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு கத்தார் சென்றடைந்தது பற்றி...

News image

ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி / அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் / இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 7:48 pm IST

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கத்தாரில் நிகழும் பேசுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கத்தார் சென்றடைந்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்பட்டதையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் இரு நாடுகளும் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல், ஹோர்முஸ் நீரினையைக் கடக்கும் போது, ஈரான் அந்தக் கப்பலை தாக்கியது.

அந்தக் கப்பலானது, ஈரான் கடலோரப் பகுதியில் செல்லாமல் மற்றொரு பதையில் சென்றதால் அதனை தாக்கியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரான் தரப்பில் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளனர். இந்த சந்திப்பானது கத்தாரில் உள்ள தோஹாவில் நாளை நடைபெறும்” என்று நேற்று பதிவிட்டிருந்தார்.

அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று கத்தார் சென்றடைந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பது குறித்தும் போரை முழுவதுமாக நிறுத்தும் இறுதி ஒப்பந்தம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஈரான் தரப்பில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A US delegation arrived in Qatar on Tuesday (June 30) for talks aimed at bringing an end to the conflict between Iran and the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.