சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே..! போப் 14-ம் லியோவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ போப் 14 ஆம் லியோவை சந்தித்தது குறித்து...

rubio and pope leo meeting

போப் 14-ம் லியோவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சந்திப்பு... - AP

Published On :7 மே 2026, 5:57 pm IST

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாடிகன் நகரத்தில் போப் பதினான்காம் லியோவை சந்தித்து உரையாடியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ வாடிகன் நகரம் மற்றும் இத்தாலி நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று (மே 7) சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தில், வாடிகன் நகர தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் 14-ம் லியோவை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், இருவரும் தங்களுக்குள் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.

ஏற்கெனவே, போப் லியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு, இருதரப்புக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ஆகியோரை ரூபியோ வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போப் லியோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இதனால், அமெரிக்க அமைச்சர் ரூபியோவின் இத்தாலி மற்றும் வாடிகன் நகர பயணம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான போரைக் கண்டித்து, போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்க மாட்டார் என அதிபர் டிரம்ப்பை போப் லியோ விமர்சித்திருந்தார்.

அதற்கு, தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து செய்யறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டிருந்தது பல்வேறு தரப்பினரிடம் கண்டனங்களைப் பெற்றது.

மேலும், போப் லியோவுக்கு எதிரான கருத்துகளுக்கு அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US Secretary of State Marco Rubio travels to Vatican City to meet Pope Leo XIV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.