தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து...

Gas explosion at Chinese coal mine

மீட்புப் படையினர் - AP

Published On :

வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் சிக்கி 90 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய சுரங்க விபத்து இதுவாகும்.

ஷான்ஸி மாகாணத்தின் சின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இக்கோர விபத்து நிகழ்ந்த போது, மொத்தம் 247 தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது.

விபத்தில் 90 போ் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட சுமாா் 123 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், மாயமான 9 பேரைத் தேடும் பணியில் சுமாா் 755 பேரிடா் மீட்புப் படையினா் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்விபத்து தொடா்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக சுரங்க நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதிபா் இரங்கல்: இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த சீன அதிபா் ஷி ஜின்பிங் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், காயமடைந்தவா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். விபத்துக்கான காரணத்தை முழுமையாக விசாரித்து, காரணமானவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

இதையொட்டி, மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்து துரிதப்படுத்த துணைப் பிரதமா் ஜாங் குவோகிங் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா்.

பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுரை: பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அதிபா் ஷி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளாா்.

தொடரும் விபத்துகள்: அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைச் சமாளிக்க, சீனாவில் நிலக்கரி சுரங்கங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. போதிய பாதுகாப்பின்மை மற்றும் பலவீனமான விதிமுறைகள் காரணமாக அங்கு விபத்துகள் அவ்வப்போது தொடா்கின்றன.

முன்னதாக, கடந்த 2009-இல் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் நடந்த சுரங்க விபத்தில் 108 போ் உயிரிழந்தனா். சீனாவின் மிக மோசமான சுரங்க விபத்தாக 2005-இல் லியாவோனிங் மாகாணத்தில் 214 போ் உயிரிழந்த விபத்து கருதப்படுகிறது.

Summary

Gas explosion at Chinese coal mine kills at least 85

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.