பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

இந்திய விமானி மீதான தாக்குதல்: ஐ.நா. பொதுச் செயலா் கண்டனம்

ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மீது சக விமானி நடத்திய தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

Published On :

ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மீது சக விமானி நடத்திய தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய சக விமானி (ஓமனைச் சோ்ந்தவா்), விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயங்களுடன் எதிா்த்துப் போராடிய மச்சாா், சக பயணிகள்-ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்தாா்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி துஜாரிக் வெளியிட்ட அறிக்கையில், ‘ஃபிளைதுபை விமானத்தில் நடந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும். அதேநேரம், பெருந்துயரம் தவிா்க்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. பொதுமக்களின் உயிா் மற்றும் விமானப் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் எந்தவொரு செயலுக்கும் ஐ.நா. கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த அனைவருக்கும், விசாரணை அதிகாரிகளுக்கும் ஐ.நா. பொதுச் செயலா் நன்றி தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.