
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்! விடியோ வைரல்!
நேபாள வெள்ளத்தை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதமே கணித்துள்ள விடியோ வைரலாகி வருகிறது...

நேபாள வெள்ளத்தை முன்கூட்டியே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்... - ஏபி | யூடியூப்
நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உள்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,
“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.
நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
A video of a Christian priest predicting two months before the disaster that Nepal would be affected by floods is going viral on the internet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






