
கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஒசாமா மகன் விடியோவை வெளியிட்ட அல் கய்தா! 9/11 நினைவு நாளில்
கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஒசாமா மகன் ஹம்சாவின் விடியோவை வெளியிட்டது அல் கய்தா

ஒசாமா - ஹம்சா
அமெரிக்காவில் செப்.11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கய்தா பயங்கரவாத அமைப்பு, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேனிடன் விடியோவை வெளியிட்டுள்ளது.
அஸ்-சாஹேப் எனப்படும் அல் கய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில், ஹம்சாவின் முதல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒசாமா பின் லேடனின் மகன், அடுத்த தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், 2019ஆம் ஆண்டு அமெரிக்கக் கூட்டுப் படைகள் இணைந்து ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலின்போது ஹம்சா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 50 வினாடிகள் ஓடும் அந்த விடியோவுக்கு செப்டம்பர் 11 தாக்குதல்களின் கால் நூற்றாண்டு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அல் கய்தாவின்த லைவர் ஐமன் அல் சவாரியின் முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
ஒரு மோசமான பின்னணியில் ஹம்சா அமர்ந்திருக்கிறார். விரிசல் விட்ட மண் சுவர், வெள்ளை டர்பன் தலையில், கையில் ஒரு துப்பாக்கியுடன் பேசுகிறார். இந்த விடியோவில் இருப்பது ஹம்சா தானா என்பதை உறுதி செய்ய அமெரிக்கா புலனாய்வுத் துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் புலனாய்வு விசாரணைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






