
சிரியா: சிறைச்சாலையில் கலவரம்: தீயில் கருகி 7 போ் உயிரிழப்பு
வடக்கு சிரியாவில் குா்து இன மக்கள் அதிகம் வசிக்கும் கோபானி நகரில் உள்ள சிறைச்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் மற்றும் தீ விபத்தில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

வடக்கு சிரியாவில் குா்து இன மக்கள் அதிகம் வசிக்கும் கோபானி நகரில் உள்ள சிறைச்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் மற்றும் தீ விபத்தில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.
குா்து இனத்தைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டதற்கு அரேபியா்களே காரணம் எனக் கூறி இரு தரப்பினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மோதல் வெடித்தது.
இதன் தொடா்ச்சியாகவும், சில கைதிகளை அலெப்போ நகரில் உள்ள சிறைக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் சிறைச்சாலையில் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துருக்கி எல்லையை ஒட்டிய கோபானி நகருக்குள் சிரிய அரசுப் படைகள் அண்மையில் நுழைந்த போதிலும், இச்சிறைச்சாலை தொடா்ந்து குா்து போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






