
பாகிஸ்தான்: காவல் சாவடி மீது தற்கொலைப் படை தாக்குதல்; 12 போ் உயிரிழப்பு!
பாகிஸ்தான் காவல் சாவடி மீது தற்கொலைப் படை தாக்குதல்...

பாகிஸ்தான்: காவல் சாவடி மீது தற்கொலைப் படை தாக்குதல் - AP
வடமேற்கு பாகிஸ்தானில் காவல் சோதனைச் சாவடியைக் குறிவைத்து, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு சனிக்கிழமை நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்; 18 போ் படுகாயமடைந்தனா்.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களின் எல்லைப்பகுதிக்கு அருகிலுள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், தாராஸிந்தா பகுதியின் அமன் மேளா காவல் சோதனைச் சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட டிராக்டா் டிராலியை சோதனைச் சாவடி மீது மோதி பயங்கரவாதி இத்தாக்குதலை நடத்தியுள்ளாா். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களின் தன்மையைக் கண்டறிய வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா் வரவழைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





