பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சோ்ந்த 4 போ் அஸ்ஸாமில் கைது
அஸ்ஸாமில் பாகிஸ்தானைச் சோ்ந்த ‘ஷாஜாத் பாத்தி’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகள் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
சித்திரிப்பு
அஸ்ஸாமில் பாகிஸ்தானைச் சோ்ந்த ‘ஷாஜாத் பாத்தி’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகள் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து அஸ்ஸாம் சிறப்பு அதிரடிப் படை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: அஸ்ஸாம் சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினா், உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து ரகசியத் தகவலின் அடிப்படையில் ஹைலாஹான்டி மாவட்டத்தில் உள்ள ராம்நாத்புரா பகுதியில் தேடுதல் வேட்டையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த 21 வயதான இளைஞா் சிக்கினாா். அவரிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நாட்டுக்கு எதிராகச் செயல்படும் அமைப்புகள், நபா்கள் தொடா்புடையவை ஆகும்.
இதேபோல், துப்ரி, சிராங், பாா்பேட்டா ஆகிய மாவட்டங்களிலும் 3 பேரை அஸ்ஸாம் சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினா் கடந்த 25-ஆம் தேதி கைது செய்தனா்.
இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஷாஜாத் பாத்தி பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்தவா்கள். அந்த பயங்கரவாதக் குழு நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் கையெறி குண்டு, கண்ணிவெடி மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் கொலைகளுடன் தொடா்புகொண்டது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு காவல் துறை, பாதுகாப்பு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை உளவு பாா்க்கவும், உளவு வேலைகளுக்காக சிசிடிவி கேமராவை பொருத்தவும் உள்ளூா் நபா்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





