தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா
பெங்களூர், ஜன. 8: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது, இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொள்கிறார். இதுகுறித்து தமிழ்ச் சங்கச் செயலாளர் கோ.தா


பெங்களூர், ஜன. 8: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது, இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து தமிழ்ச் சங்கச் செயலாளர் கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய முப்பெரும் விழாக்கள் ஜனவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 15-ம் தேதி மாலை 5 மணிக்கு சங்க மாணவர்களின் இசை நிகழ்ச்சியை ஆசிரியர் ரபி நடத்துகிறார். அன்று மாலை 6 மணிக்கு பொங்கல் விழா சிறப்புரையை கி.வீரமணி நிகழ்த்துகிறார்.
16ம் தேதி மாலை 5 மணிக்கு சாந்த சீலனின் தந்திரக் காட்சிகள், மாலை 6 மணிக்கு வாழ்க்கை என்பது பூந்தோட்டமா, போராட்டமா என்ற தலைப்பில் பட்டி மண்டபம் நடக்கிறது. உலக திருக்குறள் பேரவை செயலாளர் புலவர் மணி. தி.சு. மலையப்பன் நடுவராகப் பணியாற்றுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...