பெங்களூருவில் வெள்ளிக்கிழமை(மார்ச் 4)பேருந்து தினம் கொண்டாடப்படுவதால், குறிப்பிட்ட தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம்(பி.எம்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு மக்களுக்கு திறன்வாய்ந்த, நம்பகமான, பாதுகாப்பான, வசதியான பேருந்து சேவைகளை வழங்க வேண்டுமென்பதே மாநகர போக்குவரத்துக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும். இதனிடையே பெங்களூருவில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைப்பதற்காக அரசு பேருந்துசேவைகளை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்காக 2010-ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் 4-ஆம் தேதியை பேருந்துதினமாக கொண்டாடிவருகிறோம்.
இம்மாதம் 4-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) 74-வது பேருந்துதினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பழைய விமானநிலையசாலை, சர்ஜாபூர் சாலை, ஒசூர் சாலை, பன்னர்கட்டாசாலை, கனகபுரா சாலை, மைசூர் சாலை, மாகடிசாலை, தும்கூர் சாலை, பல்லாரி சாலை, தனிசந்திராசாலை, ஹென்னூர் சாலை, பழைய மதராஸ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக 6266 பயணத்தடங்களில் 14 லட்சம் கிலோமீட்டர் சாலை பயணத்தில் 75,928 நடைகள் இயக்கப்படும். இதன்மூலம் 53 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துதினத்தை முன்னிட்டு கூடுதலாக 1500 பயணத்தடங்களில் பேருந்து இயக்கப்படும். மேலும் 22 மணி நேரம்பேருந்து சேவை வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




