அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொலைநிலைக் கல்வியில் சேர கால அவகாசம்

பெங்களூரு பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான கடைசிதேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:07 am

DIN

பெங்களூரு பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான கடைசிதேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம்-தொலைநிலைக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைநிலையக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப்படிப்புகளான பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ.,முதுநிலைப் பட்டப் படிப்புகளான எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி(கணிதம்), முதுநிலைப் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.
அபராதமில்லாமல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி நவ.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.200 அபராதம் செலுத்தி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற டிச.15-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்படுகிறது.
நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் செலுத்துவதற்கான கடைசி தேதி டிச.30 ஆகும். இப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 வசூலிக்கப்படுகிறது.  விண்ணப்பங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு w‌w‌w.‌d​c​c​b‌u​b.‌i‌n என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961261,22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு   கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.