கெங்கேரி போக்குவரத்து காவல் சரகத்தில் டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்தவர் தேஜஸ்விகெளடா (22). இவர் புதன்கிழமை காலை 7.15 மணியளவில் உத்தரஹள்ளி பிரதானசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நிர்மலாகிரி மருத்துவமனை அருகே உள்ள வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ்விகெளடா, மோட்டார் சைக்கிளிருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்புறத்திலிருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி, அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கெங்கேரி போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.