தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு பயிற்சிகள் தொடக்கம்
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் பிப்.1 முதல் தொடங்கப்பட்டுள்ளன.


பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் பிப்.1 முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் பிப்.1-ஆம் தேதிமுதல் யோகா, கராத்தே, வாய்ப்பாட்டு,வீணை, பரதநாட்டியம், தமிழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. யோகா வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 முதல் 8.30 மணிவரை, மாலை 6-30 மணி முதல் 7-30 மணி வரை நடைபெறும். யோகா நிபுணர் உமாபதி மூலம் யோகா வகுப்பு சிறப்பாக கற்று தரப்படுகிறது. புதன்கிழமைதோறும் மாலை 7-30 மணிக்கு சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நரம்பு சம்மந்தமான நோய்கள், மன அழுத்தம், தசைப்பிடிப்பு முதலான அனைத்து நோய்களுக்கும் பலன் தரும் யோகா சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதுதவிர, கராத்தே, நாட்டிய பயிற்சி வகுப்புகளும் நடக்கும். கராத்தே வகுப்புகள் விழாயன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.30மணி வரை, ஞாயிறுக்கிழமைகளில் காலை 7.30மணிமுதல் 9 மணிவரை; நாட்டிய வகுப்புகள் திங்கள், வியாழக்கிழமைகளில் மாலை 5.30 மணிமுதல் 6.30 மணிவரை நடக்கவிருக்கின்றன.
வாய்ப்பாட்டு மற்றும் வீணை வகுப்புகள் சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணி முதல்மாலை 4.30மணிவரை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடக்கிறது. அதேபோல, தமிழ் பயிற்சி வகுப்புகள் திங்கள்முதல் வியாழக்கிழமை வரை தினமும் மாலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையும், வார வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையும் நடைபெறுகின்றன.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 080-25510062,9448201837 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...