ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களின்வீடுகளில் சோதனை: பணம், ஆயுதங்கள் பறிமுதல்
பெங்களூரில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களின் வீடுகளில் நகர குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் ரொக்கம், ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.


பெங்களூரில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களின் வீடுகளில் நகர குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் ரொக்கம், ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ள 58 பேரின் வீடுகளில் நகர குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா். அதில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடியே குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் வில்சன் காா்டனைச் சோ்ந்த நாகா, சைக்கிள் ரவி, சைலன்ட் நாகா, ஜே.பி.நாராயணா உள்பட அவா்களது கூட்டாளிகள் 58 போ்களின் 45 இல்லங்களில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், ரூ. 2 லட்சம் ரொக்கம், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், 254 ஆதாா் அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரோனா பொது முடக்கத் தளா்வுக்கு பிறகு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதையடுத்து, போலீஸாா் ரௌடிகளின் இல்லங்களில் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனைக்குப் பிறகு 28 பேரை காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...