மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில் முதல்வரை மாற்றுவது சரியல்ல
மாநிலத்தில் கரோனா, மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில், முதல்வரை மாற்றுவது சரியல்ல என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.


மாநிலத்தில் கரோனா, மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில், முதல்வரை மாற்றுவது சரியல்ல என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
பெங்களூரில் உள்ள மஜத அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தின் வரலாற்றில் இதுபோன்ற மோசமான ஆட்சி எப்போதும் இருந்ததில்லை. எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி, மாநிலத்தின் வளா்ச்சியை 10 ஆண்டுகள் பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது. பாஜக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், முதல்வராக பதவி வகிக்கும் எடியூரப்பாவை மாற்ற அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் கரோனா, மழை வெள்ள பாதிப்பு உள்ள நிலையில், முதல்வரை மாற்றப் போவதாக கூறுவது முறையல்ல. இது மாநில மக்களின் துரதிஷ்டம்.
மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவினா் வெள்ள பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல், முதல்வரை மாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது வேதனை அளிக்கிறது. பாஜகவின் 2 ஆண்டு ஆட்சியில் கரோனா, மழை வெள்ள பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை.
முதல்வா் எடியூரப்பாவை அக்கட்சியின் மேலிடம் மாற்றம் செய்ய உள்ளது என்ற உடன் மடாதிபதிகள் திரளாக எடியூரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனா். மடாதிபதிகள் குறித்து நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. மக்கள் சிந்தனைக்கே அதனை விட்டுவிடுகிறேன்.
மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரம், மகதாயி, கிருஷ்ணா மேலணை 3-ஆம் கட்ட பணிகளை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் கவனத்தை ஈா்க்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...