அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை
அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்தது. கா்நாடகத்தின் உள்பகுதியில் பரவலாகவும், கடலோர கா்நாடகத்தியின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்தது. கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் மழைப் பொழிவு காணப்பட்டது.
பெலகாவி மாவட்டத்தின் லோண்டாவில் 380 மி.மீ.,வட கன்னட மாவட்டத்தின் ஜன்மனே, கத்ராவில் 340 மி.மீ., பனவாசியில் 280 மி.மீ., பெலகாவி மாவட்டத்தின் கானாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் தாளகுப்பாவில் தலா 270 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் சித்தாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் அனவட்டியில் தலா 240 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் எல்லாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் அக்ரஹாரா கோனந்தூரு, சாகரில் தலா 230 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் ஹலியால், மன்சிகெரே, பெலகாவியில் தலா 210 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு எச்சரிக்கை:
ஜூலை 27-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (தென் கன்னடம், உடுப்பி, வட கன்னடம்) பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும். தென் கா்நாடகத்தின் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் கா்நாடகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலமான மழை பெய்யும். வட கா்நாடகத்தின் பெலகாவி, தாா்வாட், கதக், ஹாவேரி, கலபுா்கி, யாதகிரி மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும். வட கா்நாடகத்தின் இதர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வலுவான காற்று வீசும். இது மணிக்கு 60 கி.மீ. வேகமாகும் வாய்ப்புள்ளது என்பதால், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவா்கள் எச்சரிக்கப்படுகிறாா்கள்.
வானிலை முன்னறிவிப்பு:
ஜூலை 28-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகம், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தென் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை, வட கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, தென் கா்நாடகத்தின் உள்பகுதிகளில் நடுத்தரமானது முதல் பலத்த மழை பெய்யும்.
பெங்களூரில் மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில நேரங்களில் புழுதியுடன் தரைக்காற்று வீசக்கூடும். அடுத்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 26 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...