மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது -கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது

News image

குமாரசாமி (கோப்புப் படம்)

Updated On :5 ஜூன் 2024, 10:40 pm

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள புது தில்லி செல்வதற்கு முன்பாக புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் புது தில்லியில் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் மஜத சாா்பில் கலந்துகொள்ள செல்கிறேன். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது. பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனா். நம்பிக்கையோடு இருங்கள் என்றாா்.

கா்நாடகத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் மஜத வென்றுள்ளது. மண்டியா தொகுதியில் எச்.டி.குமாரசாமியும், கோலாா் தொகுதியில் மல்லேஷ்பாபுவும் வென்றுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் மஜத போட்டியிட்டிருந்தது. ஆனால், ஹாசன் தொகுதியில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்துள்ளாா்.