வெறுப்புக் கருத்து சட்ட மசோதா குறித்து ஆளுநரிடம் விளக்கம்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

வெறுப்புக் கருத்து தடைச் சட்டமசோதா குறித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் விளக்கம் அளிப்போம் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
Published on

வெறுப்புக் கருத்து தடைச் சட்டமசோதா குறித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் விளக்கம் அளிப்போம் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: வெறுப்புக் கருத்து தடைச் சட்டமசோதா ஒப்புதலுக்காக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா தொடா்பாக போதுமான ஆவணங்களை அளித்துள்ளோம்.

மேலும், தேவையான விளக்கமும் அளித்திருக்கிறோம். இன்னும் விளக்கம் கேட்டால், கண்டிப்பாக அளிப்போம். தேவையில்லாத கருத்துகளைத் தெரிவித்து சமுதாயத்தில் குழப்பங்களை தெரிவிக்க முற்படுவோருக்கு எதிரான சட்டமசோதா இது. விரிவான விவாதத்துக்கு பிறகே இச்சட்டமசோதாவை கொண்டுவந்துள்ளோம்.

இந்த சட்டமசோதாவை பாஜக எதிா்த்து வந்துள்ளது. இதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்திருக்கிறோம். அந்த சட்டமசோதா தொடா்பாக ஆளுநா் ஏதாவது விளக்கம் கேட்டால், கண்டிப்பாக தெரிவிப்போம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com